சூரரைப் போற்று – பொம்மிக்கு, சூர்யா OK சொல்லவைத்த அந்த டயலாக் எது தெரியுமா?
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் சூர்யாவின் நடிப்பில் உருவான சூரரைப் போற்று திரைப்படம் நவம்பர் 12-ம் தேதி வெளியானது. இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, மோகன்பாபு, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்திற்கு G.V.பிரகாஷ்குமார் அமைத்திருந்த இசை, ரசிகர்களுக்கு மிகச் சிறந்த விருந்தாக அமைந்திருந்தது.
இந்த படத்தில் பொம்மி, சூர்யாவை பார்க்க அவரது சொந்த ஊருக்கு செல்வார். முதல் சந்திப்பில் சூர்யா வேண்டா வெறுப்பாக தான் பேசுவார். இதில் “ஒத்த பைசா வருமானம் இல்லை. பிளேட் கம்பெனி ஆரம்பிக்க ஐடியா மட்டும் தான் இருக்கு” என்று சொல்வார்.
அடுத்த காட்சியில் எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது சூர்யாவும் பொம்மியும் பேசிக் கொள்வார்கள்.
அந்த சமயத்தில் பொம்மி, “ நூறு வருஷத்துக்கு முன்னாடி கரண்ட் தேவையில்லன்னு சொன்னாங்க, 50 வருஷத்துக்கு முன்னாடி கார் தேவையில்லன்னு சொன்னாங்க, இதெல்லாம் எவன் சொல்றது அத்தனையும் வைச்சு அனுபவிக்கறவ சொல்றது “ என சொல்வார்.
இதைக் கேட்ட சூர்யா “ எனக்கு OK உன்னை கட்டிகிறதுக்கு OK “ என சொல்வார். இதற்கு பொம்மி காரணத்தை கேட்க சூர்யாவோ காரணத்தை சொல்லாமல், “ எனக்கு நேரத்தை விரயமாக்க பிடிக்காது. ஒரு சில விஷயம் எல்லாம் அப்படித்தான் ” முடித்துவிடுவார்.
பொம்மி சொன்ன “ நூறு வருஷத்துக்கு முன்னாடி கரண்ட், 50 வருஷத்துக்கு முன்னாடி கார் “ டயலாக் பிடித்துப்போக சூர்யா தனக்கு பொம்மி தான் சரியான துணை என முடிவெடுத்து இருப்பார்.
மேலும் இந்த டயலாக்கின் மையக்கருவை சூர்யா படத்தின் பல இடங்களில் பேசி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.சூரரைப் போற்று – பொம்மிக்கு, சூர்யா OK சொல்லவைத்த அந்த டயலாக் எது தெரியுமா?