ராயல் என்ஃபீல்டு ரசிகரா நீங்கள்? வருகிறது ராயல் என்ஃபீல்டு மீட்டியோர்
கியர் பைக் ஓட்டத் தெரிந்த பெரும்பாலான இளைஞர்கள் ராயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி பார்க்க விரும்புவார்கள். தற்போது சந்தையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பல மாடல்கள் உள்ளன. இந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் பைக்குகளை ஓட்டுவதற்கும், வாங்குவதற்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
தற்போது ராயல் என்ஃபீல்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக மீட்டியோர் 350 என்ற புதிய மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப் படுத்துகிறது. இதனுடைய விபரங்களை கீழே காணலாம்.
மீட்டியோர் 350
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்பு மீட்டியோர் 350 என்கிற மாடலை வருகிற நவம்பர் 6-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. ஃபயர்பால், ஸ்டேல்லர் மற்றும் சூப்பர்நோவா என மூன்று விதமான வேரியன்டில் அறிமுகப்படுத்துகிறது.
BS-6 மாசு உமிழ்வு விதிக்கு உட்பட்ட, காற்றினால் குளிர்விக்கப்படும் 350 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.5 பிஎச்பி பவரையும் 27 Nm டார்க்கையும் தருகிறது.
இந்த மீட்டியோர் 350 பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கியர் பாக்ஸில் செய்யப்பட்ட சில மேம்பாடுகள், கியர் மாற்றுவதை முந்தைய மாடலை விட எளிமையாக்குகிறது.
இந்த மோட்டார் பைக்கில் ப்ளுடூத் உதவியுடன் செயல்படக்கூடிய டிரிப்பர் நேவிகேஷன் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது தொலை தூரம் பயணிப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
நவம்பர் 6-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் 1.70 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.