Fixed Deposit-க்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கிகள்
நம்முடைய சேமிப்பு பணத்தை பன்மடங்கு பெருக்குவதற்கு பலவகையான முதலீடுகள் உள்ளன. இதில் அதிக நம்பகத் தன்மையுடனும், முதலீட்டிற்கு பாதுகாப்பையும் கொடுக்கக்கூடிய திட்டங்களில் முதலில் இருப்பது நிரந்தர வைப்பு நிதி திட்டம் (Fixed Deposit) ஆகும்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட முதலீட்டை நிரந்தரமாக முதலீடு செய்வதால் இது நிரந்தர வைப்பு நிதி என அழைக்கப்படுகிறது. இந்த நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் முதலீட்டுக்கான வட்டி வீதமும், முதிர்ச்சி காலமும் ஆரம்பத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது. இதுவே இந்த திட்டத்தின் சிறந்த அம்சமாக இருக்கிறது.
இந்த நிரந்தர வைப்பு நிதி முதலீட்டில் அதிக வட்டி தரும் வங்கிகளின் பட்டியலைக் கீழே காணலாம்.
FD கணக்கை திறப்பதற்கு
நிரந்தர வைப்பு நிதி முதலீட்டை ஒரு வங்கியில் திறப்பதற்கு, அதே வங்கியில் சேமிப்பு கணக்கை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். ஒரு சில வங்கிகள் சேமிப்பு கணக்கு இல்லாமல் FD கணக்கை திறக்க அனுமதி அளிக்கின்றன.
ஆனால் அதற்கு கண்டிப்பாக பான் அட்டை, ஆதார் அட்டை நகலுடன், கலர் போட்டோவை (Passport Size) விண்ணப்ப படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
முதலீட்டுத் தொகை மற்றும் காலம்
FD கணக்கில் குறைந்தபட்சமாக 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதில் குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச முதலீடு வங்கிக்கு வங்கி மாறுபடும். மேலும் 2 கோடிக்கு உட்பட்ட முதலீட்டிற்கு ஒரு வட்டி விகிதமும், 2 கோடிக்கு மேற்பட்ட முதலீட்டிற்கு மற்றொரு வட்டி விகிதமும் வங்கிகள் தருகின்றன.
நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சமாக 7 நாட்களில் இருந்து அதிகபட்சமாக பத்து வருடங்கள் வரை நிரந்தரமாக முதலீடு செய்யலாம். இதில் குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச காலம் வங்கிக்கு வங்கி மாறுபடும்.
அதிக வட்டி வழங்கும் வங்கிகளின் பட்டியல்
மேலே குறிப்பிட்ட வட்டி விகிதங்கள் இரண்டு கோடி முதலீடுக்கு பொருந்தும். மேலும் வயது முதிர்ந்த குடிமகன்களுக்கு (Senior citizens) மேலே குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் இருந்து கூடுதலாக 0.5% வட்டியை வங்கிகள் தருகின்றன.
இந்த FD கணக்கில் Cumulative மற்றும் Non-cumulative இரண்டு தேர்வுகள் உள்ளன. இதில் Cumulative option-ல் முதலீட்டில் கிடைக்கும் வட்டி மீண்டும் முதலீடு செய்யப்பட்டு முதிர்வு காலத்தில் சேர்த்துக் கொடுக்கப்படும். அடுத்ததாக உள்ள Non Cumulative option-ல் முதலீட்டில் கிடைக்கும் வட்டி, மாதா மாதம் அல்லது காலாண்டிலோ அல்லது அரையாண்டிலோ உங்களது சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.
வரி பிடித்தம்
நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு 10,000 ரூபாய் வரை வருமான வரி கிடையாது. அதற்கு மேல் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும் அல்லது Form 15G or 15H படிவத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் மத்திய அரசின் வருமான வரி விதிகளின் படி 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யப்படும் பணத்திற்கு வருமானவரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டும்.
மற்ற வசதிகள்
இந்த நிரந்தர வைப்பு நிதி கணக்கை எளிதாக நம்முடைய இணைய வழி வங்கி சேவை (internet banking) மூலம் ஆரம்பிக்க வங்கிகள் அனுமதி அளிக்கின்றன. இதனால் நாம் நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அவசரகால தேவையின் போது நாம் இந்த நிரந்தர வைப்பு நிதி முதலீட்டை முறித்துக் கொண்டு நம்முடைய முதலீட்டை எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. இதில் முறித்துக் கொண்ட நாள் வரை உள்ள வட்டி கொடுக்கப்படும். ஆனால் வங்கிக்கு சிறிது அபராத தொகையை செலுத்த வேண்டும்.
மேலும் இந்த நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை கடனாகப் பெறும் வசதியும் ஒரு சில வங்கிகளில் இருக்கிறது.