பேராசை பப்பி

முன்னொரு காலத்தில் மேட்டுப்பட்டி என்கிற ஒரு கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் பப்பி என்ற ஒரு நாய் இருந்தது. அதை ஒரு விவசாயி அவனோட வீட்டில் காவலுக்கு வளர்த்து வந்தான்.
பப்பி நாய் மற்ற நாய்களை விட ரொம்பவும் அழகாக இருக்கோம்னு நினைச்சு பெருமை பட்டுகொள்ளும். தினமும் பப்பி நாய் அதனோடு இடத்திலிருந்து கிராமத்துக்குள் போறதுக்கு ஒரு சின்ன மரப்பாலம் வழியாக தான் போகும்.

கிராமத்து மக்கள் சாப்பிட்டு போடுகிற மிச்சம் மீதியை சாப்பிடும். அப்படி ஒரு நாள் ரொம்ப சீக்கிரமா காலையில் தன்னோட இடத்திலிருந்து கிராமத்துக்கு போனது.
Read Also: சோம்பேறி விவசாயி
வழக்கமாக போற இடத்துக்கெல்லாம் பப்பி போய் பார்த்தது. ஆனால் எங்கேயும் எதுவும் சாப்பிடறதுக்கு கிடைக்கவில்லை.
“இன்றைக்கு என்ன ஆச்சு? எனக்கு சாப்பிடறதுக்கு ஒண்ணுமே கிடைக்கவில்லையே! இன்னும் கொஞ்ச தூரம் போய் பார்ப்போம்.”
அப்படி கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம் தூரத்தில் ஒரு எலும்பு துண்டு கிடந்தது. அதை பப்பி வேகமாக ஓடிப் போய் கவ்வி கொண்டது

இந்த எலும்பை பொறுமையாக கடித்து ருசித்து சாப்பிடணும். அதுக்கு நம்ம இடம்தான் சரியான இடம், என்று மனசுக்குள்ளே சொல்லிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடியது.
அப்போது பப்பி மரப்பாலத்தை கடக்கும்போது ஏதேச்சையாக கீழே ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரை பார்த்தது. அதில் ஒரு நாய் வாயில் எலும்பு துண்டுடன் இருப்பது தெரிந்தது.

அந்த நாயின் வாயிலும் ஒரு பெரிய எலும்பு துண்டு. அவன் வச்சிக்கிற எலும்பையும் நான் பறித்துக் கொள்வேன். அப்போ என்கிட்ட இரண்டு எலும்பு துண்டுகள் இருக்கும். இன்னைக்கு நல்ல விருந்து தான், என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே நீரில் தெரிந்த நாயை நோக்கி பாய முற்பட்டது.
Read Also : சூரியனும் புள்ளிமான்களும்
அந்த நாயும் பப்பியை நோக்கி பாய்கிற மாதிரி இருந்தது. உடனே கோபத்துடன் அந்த நாயை தாக்க தண்ணீரில் பாய்ந்தது. அந்த சமயம் பப்பியின் வாயிலிருந்த எலும்பு துண்டு தண்ணீரில் விழுந்தது.

பின்பு ஒரு வழியாக கரை சேர்ந்த பப்பி, “என் வாயிலிருந்து எலும்பு துண்டை காணோம். அதை அவன் தான் எடுத்திருக்கணும். தண்ணிக்குள்ள ஒளிஞ்சி இருப்பான். வரட்டும்! இன்னைக்கு அவனை விட போறதில்லை.” என்று சொல்லிக் கொண்டே, தரையில் நெடு நேரம் காத்திருந்தது.
ரொம்ப நேரம் ஆகியதால் பசியுடன் வீட்டை நோக்கி மெதுவாக நடந்தது.
குழந்தைகளா! இந்த கதையிலிருந்து என்ன தெரிஞ்சுகிட்டோம்னா “பேராசை பட்டால் அது பெரும் நஷ்டத்தில் தான் முடியும். அதனால் இருக்கிறதை வச்சுக்கிட்டு சந்தோசமா வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.”