எலக்ட்ரிக் வாகனங்களே நம் எதிர்காலம்

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலை எரிபொருளாக கொண்டு இயங்கும் வாகனங்களே அதிகம். தற்போது தான் அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கும் கார் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகபடுத்தப்பட்டு வருகிறது.

மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கும் ரயிலை தவிர, மற்ற மின்சார வாகனங்களின் பயன்பாடு மிகவும் குறைவு.

இந்த மின்சார வாகனங்களே எதிர்காலத்தில் நமது போக்குவரத்தை தீர்மானிக்கும். இந்த எதிர்கால பயன்பாட்டுக்கான காரணத்தை கீழே உள்ள பதிவில் காணலாம்.

நிலைத்தன்மை

கடந்த சில வருடங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்படும் பிரச்சினையின் காரணமாக, வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் உற்பத்தி பாதிக்கப்பட்டு நிலைத்தன்மை இல்லாமல் இருக்கிறது.

இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, ஏற்றத்தை சந்திக்கிறது. மேலும் மத்திய மாநில அரசுகளின் வரியும், பெட்ரோல் மற்றும் டீசலை பயன்படுத்துபவர்களை அதிகம் பாதிக்கிறது.

இவ்வாறு நிலைத்தன்மை இல்லாத உற்பத்தியும், அதிக விலையும் வாகனம் ஓட்டுபவர்களை அதிகம் பாதிக்கிறது.

இதற்கு மாற்றாக உள்ள எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவைப்படும் மின்சாரத்தை காற்றாலை மின்சாரம், நீர் மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம், அனல் மின்சாரம் மற்றும் அணு மின்சாரம் போன்ற வழிகளில் நிலை தன்மையுடன் பெறலாம்.

இந்த மின்சாரத்தை பயன்படுத்துவதற்கான செலவும் மிகவும் குறைவு. மேலும் மத்திய மாநில அரசுகளின் வரியும் குறைவு.

இவ்வாறு நிலை தன்மையுடனும், குறைந்த விலையிலும் கிடைக்கும் மின்சாரத்தை வாகனங்களில் பயன்படுத்துவது சிறந்தது.

அரசின் புதிய விதிகளும் சலுகைகளும்

ஏற்கனவே, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு BS-4 காற்று மாசு உமிழ்வு விதி நடைமுறையில் இருந்தது. தற்போது மத்திய அரசு, BS-6 காற்று மாசு உமிழ்வு விதியை அமல்படுத்தியுள்ளது.

இந்த BS-6 விதிகள் மிகவும் கடுமையாக இருப்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களை மீண்டும் மாற்றி வடிவமைக்க, வாகன தயாரிப்பாளர்களால் அதிக செலவு செய்யப்பட்டது. இதனால் ஏற்பட்ட வாகனத்தின் விலை உயர்வு வாகனம் வாங்குபவர்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கிறது.

ஆனால் எலக்ட்ரிக் வாகனம் பயன்படுத்துவதை ஊக்குவிக்க மத்திய அரசு FAME-II என்ற கொள்கையின் படி, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்குகிறது. 

இதனால் ஏற்கனவே உள்ள விலையில் இருந்து குறைக்கப்பட்டு, பட்ஜெட் விலையில் கிடைப்பதால் வாகனம் வாங்குபவர்களுக்கு மிகுந்த பயனைத் தருகிறது. மேலும் மின்சாரத்திற்கான செலவு மிகவும் குறைவு.

எனவே குறைந்த விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது நல்லது.

வாகனங்களின் பயன்பாடு

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் தேவையான அளவு பவரை உருவாக்க Engine, Flywheel, Clutch, Gearbox போன்ற அதிக உதிரிபாகங்கள் உள்ள அமைப்பு தேவைப்படுகிறது. இந்த அதிகமாக இயங்கும் உதிரி பாகங்களால் அதிக அதிர்வும், சத்தமும் ஏற்படுகிறது.இது வாகனத்தில் அதிக நேரம் பயணிப்பவர்களுக்கு, அதிக சோர்வை தருகிறது.

ஆனால எலெக்ட்ரிக் வாகனங்களில் பவரை உருவாக்க, மோட்டார் மற்றும் பேட்டரி மட்டுமே போதுமானது. இதில் குறைவாக இயங்கும் பொருட்கள் இருப்பதால் அதிர்வும், சத்தமும் மிக மிக குறைவு. இதனால் வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு அதிக Comfort-ஐ கொடுக்கிறது.

எலக்ட்ரிக் வாகனங்களின் வசதி

தற்போது அறிமுகமாகியுள்ள பல எலக்ட்ரிக் வாகனங்களை வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ளும் வசதி உள்ளது. மேலும் பேட்டரியை தனியாக கழற்றி, எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்யும் வசதி இருக்கிறது.

எனவே பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை போல, அடிக்கடி பெட்ரோல் பங்கிற்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

மேலும் எலக்ட்ரிக் வாகனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை போல கரியமில வாயுக்களை உமிழ்வது கிடையாது. இதனால் நம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

இவ்வாறு பல பயன்கள் உள்ள எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது எதிர்காலத்திற்கு நல்லது.