தந்திர நரியும் கொக்கும்

முன்னொரு காலத்தில் சுந்தர வனங்கிற ஒரு அடர்ந்த காடு இருந்தது. அங்கு பல மிருகங்கள் சந்தோசமாக வாழ்ந்து வந்தன. இந்த காட்டில் தந்திர குணம் கொண்ட நரி ஒன்றும் வசித்து வந்தது.
அந்த நரி எப்போதும் யாரையாவது ஏமாற்றி அவர்கள் ஏமாறுவதைக் கண்டு மனமகிழ்வதை பொழுதுபோக்காக கொண்டிருந்தது. அதே காட்டில் கொக்கு ஒன்றும் வசித்து வந்தது.
அந்த கொக்கு அனைத்து மிருகங்களிடமும் நன்மதிப்பை பெற்று இருந்தது. இதை பொறுக்க முடியாத நரி அந்த கொக்கை எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தது. ஒரு நாள் கொக்கு நரி இருக்கும் வழியில் வந்து கொண்டிருந்தது.

இதை கவனித்த நரி “கொக்கு நண்பரே! நலமாக இருக்கிறீர்களா?” என்று கேட்டது. அதற்கு “நலமாக இருக்கிறேன். நண்பரே”.. அதன் பின்பு நரி, “கொக்கு நண்பா எனக்கு இன்று மிகப்பெரிய வேட்டை உணவு கிடைத்திருக்கிறது. அதனால் நான் நாளை உனக்கு ஒரு விருந்து வைக்க விரும்புகிறேன். உன்னால் வர முடியுமா?” என்று கேட்டது. கொக்கும் “சரி வருகிறேன்”” என்று கூறிவிட்டு சென்றது.
Read Also: சோம்பேறி விவசாயி
அடுத்த நாள் நரி சுவைமிக்க சூப் ஒன்றை செய்தது. அதில் அதிக எலும்புகளை கொட்டியது. அன்று மாலை கொக்கு நரி இடத்துக்கு சென்றது.

நயவஞ்சக நரி திட்டமிட்டபடி அதிக எலும்புகள் உள்ள சூப்பை இரண்டு தட்டில் ஊற்றி, அதில் ஒன்றைக் கொக்கிடம் கொடுத்தது. கொக்கு கொஞ்சமாக உள்ளே சூப்பை குடித்த பின்பு, அதிகமாக உள்ள எலும்பை சாப்பிட முடியவில்லை.
ஆனால் நரியோ சூப்பை நக்கி குடித்துவிட்டு, எலும்பை பற்களால் கடித்துச் தின்றது .பின்பு நரி “நண்பனே!! இந்த சூப்பை உனக்காக செய்தேன். எப்படி இருந்தது?” என்று சிரித்துக் கொண்டே கேட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கொக்கு நரியிடம், “சூப் மிகவும் சுவையாக இருந்தது” என்று கூறியது.
மீண்டும் கொக்கு நரியிடம், “இன்று நீ எனக்கு விருந்து வைத்தாய். பதிலுக்கு நான் நாளைக்கு உனக்கு விருந்து வைக்க விரும்புகிறேன். ஆனால் உன்னால் வர முடியுமா?” என்று கேட்டது. நரியும் கொக்கை ஏமாற்றிய சந்தோஷத்தில் வர சம்மதம் தெரிவித்தது.

அடுத்த நாள் கொக்கு நரிக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தது. பல மீன்களை போட்டு சுவைமிக்க சூப் ஓன்றை செய்தது. அன்று மாலை நரி கொக்கின் இடத்திற்கு சென்றது. கொக்கு நரி வந்தவுடன் சுவைமிக்க சூப்பை இரண்டு தட்டில் ஊற்றி ஒன்றை நரியிடம் கொடுத்தது.
நரி இன்று நல்ல விருந்து என ஆவலுடன் சூப்பை சாப்பிட ஆரம்பித்தது. நரி சாப்பிட்டு கொண்டிருக்கும்போது ஒரு மீனின் முள் நரியின் நாக்கில் குத்தவே வலியால் அலறியது.
அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நரி, நாம் மற்றவர்களை ஏமாற்றும் போது அவர்கள் எவ்வாறு வருத்தப்பட்டு இருப்பார்கள் என்று உணர்ந்தது.

அன்று முதல் திருந்திய நரி பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை என முடிவும் செய்தது.
இந்த கதையிலிருந்து நாம் என்ன தெரிந்து கொண்டோம் என்றால், நாம் மற்றவர்களை ஏமாற்றும் போது ரொம்ப வருத்தப்படுவாங்க அதனால நாம யாரையும் ஏமாற்ற கூடாது.