இந்திய விமானப்படையில் 10th, 12th PASS செய்தவர்களுக்கு வேலை – GROUP ‘C’ வேலைவாய்ப்புகள்
இந்திய விமானப்படை (IAF) தம்முடைய பல்வேறு விமானப்படை நிலையங்கள்/ பிரிவுகளில் GROUP ‘C’ சிவில் பணியிடங்களை நிரப்ப, தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
விண்ணப்பப் படிவம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் 6, 2021.
பணியிடங்கள்
Superintendent (Store) – 33 Posts
Lower Division Clerk (LDC) – 09 Posts
Store Keeper – 09 Posts
Cook (Ordinary Grade) – 16 Posts
Painter(Skilled – 04 Posts
Carpenter (Skilled) – 14 Posts
Copper Smith and Sheet Metal Worker (Skilled) – 01 Post
A/C Mech & A/C Mech (A) – 02 Posts
Fitter(SK) – 03 Posts
House Keeping Staff(HKS) – 06 Posts
Laundryman – 02 Posts
Mess Staff – 05 Posts
Multi Tasking Staff (MTS) – 62 Posts
Tailor (Skilled) – 05 Posts
Tradesman Mate – 07 Posts
Hindi Typist – 01 Post
வயது வரம்பு – 18 முதல் 25 வயது வரை.
வயது வரம்பு தளர்வு – OBC பிரிவுக்கு 03 ஆண்டுகள், SC / ST பிரிவுக்கு 05 ஆண்டுகள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வு.
சம்பளம் : நிலை Level 1 to Level 4 (7 வது சம்பள CPC பிரிவுபடி)
கல்வி தகுதி:
Superintendent (Store) – பட்டதாரி (இளங்கலை பட்டம்).
Lower Division Clerk (LDC) – 12 ஆம் வகுப்பு மெட்ரிக் தேர்ச்சி. கணினியில் ஆங்கிலத்தில் 35 wpm அல்லது ஹிந்தியில் 30 wpm டைப்பிங் வேகம்.
Store Keeper – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி.
Painter / Carpenter / C&SMW / A/C Mech / Fitter / Tailor – 10 வது வகுப்பு தேர்ச்சி மற்றும் இந்திய தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ஐடிஐ) சான்றிதழ்.
Hindi Typist – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி. கணினியில் ஆங்கிலத்தில் 35 wpm அல்லது இந்தியில் 30 wpm டைப்பிங் வேகம்.
மற்ற அனைத்துப் பணியிடங்களுக்கும் – 10 ஆம் வகுப்பு / மெட்ரிகுலேஷன் தேர்ச்சி.
தேர்வு செய்யும்முறை – எழுத்துத் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், அருகிலுள்ள அல்லது அவர்கள் விரும்பும் எந்த விமானப்படை நிலையத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.
கீழே கொடுக்கப்பட்ட படிவத்தில் உள்ளதுபோல் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்யப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் தகுதியான சான்றிதழ்களை (பிரதி) இணைத்து விமானப்படை தளத்துக்கு சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும்.
Download
இந்த விண்ணப்ப படிவத்தில் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டவேண்டும். அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சான்றிதழ்களில் கீழே சுய கையொப்பம் இடவேண்டும்.
இதனுடன் சுய விலாசத்தை இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுதி ரூபாய் 10-ஸ்டாப் ஒட்டப்பட்ட தபால் உரையை இணைக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் தனி விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தபால் துறைக்கு மேலே APPLICATION FOR THE POST OF ______ AND CATEGORY ______ AGAINST ADVERTISEMENT NO.03/2021/DR”. என எழுதி 2021, செப்டம்பர் 6 ஆம் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.