ABS Technology-யின் முக்கியமான மூன்று பயன்கள் in tamil
ABS-ன் பயன்கள்
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படும் பிரேக்கிங் தொழில்நுட்பமான ABS-ன் முக்கியமான 3 பயன்களைப் பற்றி பார்க்கலாம்.
இந்தABS டெக்னாலஜியின் முக்கிய நோக்கமே வாகனத்தின் Steeringஐ ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் வைத்து விபத்து ஏற்படாமல் தடுப்பதாகும்.
இந்தABS டெக்னாலஜியின் 3 பயன்களில் முதலாவது Skiddingஐ தடுப்பது.
1. Skiddingஐ தடுப்பது
பைக்கிலோஅல்லதுகாரிலோவேகமாகசென்றுகொண்டிருக்கும்போது குறுக்கே ஏதாவது வாகனம் வந்து விட்டால் பிரேக் பிடிப்பது தவிர்க்க இயலாதது. இந்தசமயத்தில் Wheel Lock ஆனால் வாகனம் Skid ஆகும்.
இதனால்ஓட்டுனரின் Steering கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஏபிஎஸ் உள்ள வாகனத்தில் Wheel lockingஐ தடுத்து வாகனம் Skid ஆவதை முற்றிலும் தடை செய்கிறது. இதனால் ஓட்டுநர் Steeringஐ எளிதாக கட்டுப்படுத்தி வாகனத்தை விபத்திலிருந்து தவிர்க்கலாம்.
2. நிற்கும் தூரத்தை குறைப்பது
Normal Bike-களில் தேவையான அளவு பிரேக்கை நாம் உணர்ந்து முன் சக்கரம் மற்றும் பின் சக்கரத்திற்கு கொடுக்க வேண்டும்.
ஆனால் ஏபிஎஸ் உள்ள பைக்கில் பிரேக் பிடித்தவுடன் ABS System இரண்டு சக்கரத்திற்கும் பிரேக்கை கொடுத்து குறைந்த தூரத்தில் வாகனம் நிற்க உதவுகிறது.
இந்த குறைந்த தூரத்தில் வாகனத்தை நிற்க வைப்பதால் ஆபத்து காலங்களில் விபத்தை தவிர்க்க முடிகிறது.
3. வழுக்கும் தரையில் எளிமையாக பிரேக் பிடிப்பது
ரோட்டில் சில சமயம் ஆயில் போன்ற வழுக்கும் திரவங்கள் கொட்டியிருக்கலாம் அல்லது மழை பெய்த பின்பு உள்ள ஈரமான தரையில் வேகமாக சென்று பிரேக் பிடிக்கும்போது Bike Skid-ஆகி விபத்து ஏற்படும்.
ஆனால் ஏபிஎஸ் உள்ள பைக்கில் பிரேக் பிடித்தால் பைக் Skid ஆவதை தடுத்து ஒரே நேர்கோட்டில் நிற்க உதவுகிறது. இதன் மூலம் விபத்து தவிர்க்கப்படுகிறது.
இந்த ABS Technology செயல்படும் விதம் மற்றும் எவ்வாறு Skiddingஐ தடுக்கிறது என்பதைப் பற்றி கீழே உள்ள Atricle-களில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
Click Here: How ABS Works in tamil