பைக்கில் தொலைதூரம் பயணிக்கிறீர்களா? இது ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்
வார இறுதி நாட்களில அல்லதுவிடுமுறை கிடைக்கும்போது நண்பர்களுடன் சேர்ந்து பைக்கில் தொலைதூரப் பயணம் செல்வதே தனிசுகம் தான். தொலைதூர பயணம் செல்லும்போது ஒரு சில முக்கியமான பொருட்களை நாம் எடுத்துச் செல்வோம். இந்த பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், பயணத்தை இனிமையாக இருக்க உதவுகிறது.
அந்த வகையில் குறைந்த விலையில்கிடைக்கக் கூடிய, தொலைதூர பயணத்திற்குமிகவும் பயனுள்ளதாக இருக்கும் முக்கியமான பொருட்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
1.நீர்ப்புகா மொபைல் போன் தாங்கி
பைக்கில் தொலைதூர பயணம் செல்பவர்கள் அதிகமாக புது புது இடத்திற்கு போக விரும்புவார்கள். இந்த சமயத்தில் மொபைலில் உள்ள Map, GPS, Navigation Assist வசதிகள் மிகவும் உதவியாக இருக்கும்.
எனவே பைக் Handle bar- ல் மாட்டிக்கொள்ளும் வசதி உடைய மொபைல் தாங்கி(Mobile Holder) இருப்பது நல்லது. மேலும் தொலை தூர பயணத்தின் போது ஏற்படக்கூடிய வானிலை மாற்றம், தூசி மற்றும் மழையிலிருந்து பாதுகாக்க கூடிய நீர்ப்புகா மொபைல் போன் தாங்கி (Waterproof Mobile Holder) இருப்பது சிறந்தது.
தற்போது உள்ள Mobile Holder எளிமையாக பைக்கின் Handle bar- ல் மாட்டிக் கொள்ளும் வசதி இருக்கிறது. மேலும் 360 degree கோணத்திலும் திருப்பி கொள்ளும் வசதி இருப்பதால், ஓட்டுனரின் பார்வைக்கு ஏற்ற வகையில் சரி செய்து கொள்ளலாம்.
2.Rubber gear shifter
பெரும்பாலும் Gear shifter, steel-ஆக இருப்பதால் பைக் ஓட்டுபவர்கள் அணிந்திருக்கும் செருப்பு அல்லது காலணியின் அந்த இடம் மட்டும் தேய்மானம் அடையும். இந்த பிரச்சனை கியர் பைக் ஓட்டுபவர்கள் நிறைய பேருக்கு கண்டிப்பாக வந்திருக்கும்.
இந்த பிரச்சனையை தடுக்கவே முழுவதும் ரப்பரினால் ஆன கியர் Shifter-ஐ அறிமுக படுத்தியிருக்கிறார்கள். அனைத்து பைக்குகளின் gear shifter-லும் மிகவும் எளிமையான மாட்டிக் கொள்ளும் வசதி உடைய இந்த ரப்பர் கியர் Shifter, நம்முடைய செருப்பு மற்றும் விலை உயர்ந்த காலணியை damage ஆவதில் இருந்து தடுக்கிறது.
இந்த ரப்பர் கியர் Shifter, தொலை தூரம் பயணம் செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் நகரத்தில் அதிகமாக கியர் பைக் ஓட்டுபவர்கள், இந்த ரப்பர் கியர் Shifter-ஐ வாங்கி பயன்படுத்தலாம்.
3. Power Bank
தொலைதூரம் பயணிப்பவர்கள் புதிய இடத்திற்கு செல்வதால் அங்கு மொபலை சார்ஜ் செய்யும் வசதி இருக்குமா? என்று தெரியாது. எனவே முன்கூட்டியே சார்ஜ் செய்யப்பட்ட Branded Power Bank-ஐ எடுத்துச் செல்வது நல்லது.
மேலும் இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்காக சின்ன கையடக்க டார்ச் லைட்டை எடுத்துச் செல்வது நல்லது.
இறுதியாக தொலைதூர பயணம் செய்வதற்கு முன்பு பைக்கின் Brake condition, Tyre pressure Check செய்வது என, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது.